ஹைட்ரோபாயில் தொழில்நுட்பம் மூலம், தண்ணீருக்கு மேல் பறப்பதுபோல் தோற்றமளிக்கும் அதிவேக மின்சார படகு அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மின்னணு சாதன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மின்சார கார்களுடன் ஒப்பிடுகையில் மின்சார படகுகளுக்கு 15 மடங்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால் அவற்றின் புழக்கம் குறைவாக உள்ளது. மேலும், படகுகள் தண்ணீரை கிழித்துக்கொண்டு செல்லும்போது முன்புறத்தில் தண்ணீர் மோதி வேகம் குறைவதை தவிர்ப்பதற்காக, படகுக்கு அடியில் விமான இறக்கைகள் போல் காட்சியளிக்கும் ஹைட்ரோபாயில்-கள் பொருத்தப்படுகின்றன.
இவ்வாறு ஹைட்ரோபாயில் பொருத்தப்பட்டு, மணிக்கு 37 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மின்சார படகை ஸ்வீடன் நாட்டு நிறுவனமொன்று தயாரித்துள்ளது. காண்டெலா சி-8 என்ற இந்த படகு மூனேகால் கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.