ரோபோகளின் செயல்பாடுகள் Program Coding மூலம் தீர்மானிக்கப்பட்டுவந்த நிலையில், Program Coding தெரியாதவர்கள் கூட வெறும் வாய்மொழியால் பிறப்பிக்கும் உத்தரவுகளை பின்பற்றி அதற்கேற்ப தனது செயல்பாடுகளை வடிவமைத்துக்கொள்ளக்கூடிய ரோபோ அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புரோகிராம் கோடிங் தெரியாதவர்களும் ரோபோகளின் செயல்பாட்டை வடிவமைக்க வழிவகை செய்யும்விதமாக, Tactagon Technology என்ற நிறுவனம், voice மற்றும் motion control மூலம் இயங்கக்கூடிய ஒரு அடி உயர ரோபோவை உருவாக்கியுள்ளது.
நமது சைகைகளையும், வாய்மொழி உத்தரவுகளையும் பின்பற்றி அதற்கேற்ப செயலாற்றக்கூடிய இந்த ரோபோவிற்கு டைட்டன் பாய் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் விலை ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.