டெல்லியில், இளம்பெண் ஒருவர் காரின் அடியில் சிக்கி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டது போல், உத்தரபிரதேசத்தில், பள்ளி மாணவன் ஒருவன் காரில் சிக்கி, சாலையில் இழுத்துச் செல்லப்படும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
ஹர்டோய் பகுதியில் பயிற்சி வகுப்புக்கு சைக்கிளில் சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் கேதன் குமார் மீது, அவ்வழியே வந்த கார் மோதியதில், காரின் பின்புறம் சிறுவனின் கால் மாட்டிக்கொண்டது.
விபத்து நடந்த இடத்திலிருந்து தப்ப முயன்ற ஓட்டுநர், காரை வேகமாக இயக்கிய நிலையில், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் காரை விரட்டிச்சென்ற பொதுமக்கள், சிறுவனை காயங்களுடன் மீட்டனர்.