டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டின் மருத்துவத்துறை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து முடிக்கவும், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்குமாறும் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.
6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கவும், தமிழகத்தில் உள்ள 30 அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய செவிலியர் கல்லூரிகள் நிறுவுமாறும் வலியுறுத்தினார்.