சிலி நாட்டின் Hualpen பகுதியில், ஆற்றின் நடுவே உள்ள பாறையில், 4 நாட்களாக சிக்கித் தவித்த நாயை, கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
சுற்றிலும் நீருக்கு நடுவே இருக்கும் அந்த ராட்சத பாறையில் நாய் ஒன்று சிக்கித் தவித்ததைக் கண்ட கடற்படை வீரர்கள், ரப்பர் படகில் அங்கு சென்று, தீயணைப்புத்துறையினரின் உதவியுட நாயை மீட்டனர்.
பின்னர், நாயை படகில் ஏற்றி, கரைக்கு கொண்டு வந்த கடற்படை வீரர்கள், அதனை கால்நடைகள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.