புதுச்சேரியில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், தட்டாஞ்சாவடியில் மருந்து மொத்த விற்பனை நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வருகிறார்.
அவர் நேற்று காலை அந்நிறுவனத்தின் வசூல் பணத்தை எடுத்துக்கொண்டு, வங்கியில் டெபாசிட் செய்ய இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது முக கவசம் அணிந்திருந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, கத்தியால் வெட்டி விட்டு, வண்டியின் டிக்கியில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் பாலசுப்பிரமணியனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் பணப் பறிப்பில் ஈடுபட்டவர்கள் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் மெல்வின் மற்றும் கிருஷ்ண மூர்த்தி என தெரிய வந்ததை அடுத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.