தண்ணீரை சேமிக்க அரசின் முயற்சிகள் மட்டுமின்றி, மக்களின் பங்களிப்பும் அவசியமானது என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறும் தேசிய நீர்வளத்துறை மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் பங்கேற்றார்.
அதில் உரையாற்றிய அவர், ஜியோசென்சிங், ஜியோமேப்பிங் போன்ற தொழில்நுட்பங்களை நீர் சேமிப்புத்துறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், ஜல் ஜீவன் திட்டம் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்குவதற்கான முக்கிய முன்னெடுப்பாக மாறியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக 75 நீர்நிலைகளை அமைக்கவும், சீரமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும், இதுவரை 25 ஆயிரம் நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.