அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் மேகான் பகுதியில் சூறாவளி சுழன்றடித்துச்சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
கருமேகங்களில் இருந்து ஒரு பெரிய சூறாவளி, காற்றாலைகளை கடந்துச்சென்ற காட்சி, அதில் பதிவாகியுள்ளது. மத்திய இல்லினாய்ஸில் ஆறு சூறாவளிகள் தாக்கியதாக, அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சூறாவளியைத்தொடர்ந்து அம்மாகாண மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.