அமெரிக்காவில், ரக்பி போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கவலைக்கிடமாக உள்ள Buffalo Bills அணி வீரர் டாமர் ஹாம்லினின் நினைவாக, அவர் அணியும் சீருடை நிறத்தில், நயாகரா அருவி ஒளிரூட்டப்பட்டது.
அதேபோல் நியூயார்க்கில் முக்கிய கட்டடங்களும் அவர் நலம்பெற வேண்டி, நீலம் - சிவப்பு என, அவர் அணியும் சீருடை நிறங்களால் ஒளிரூட்டப்பட்டன.
கடந்த திங்கள் இரவு, எதிரணி வீரர் வேகமாக மோதியதால் மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்த டாமர் ஹாம்லின், மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.