கர்நாடக மாநிலம் மங்களூரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இரண்டுபேரை போலீசார் கைது செய்து சுமார் நான்கரை லட்சம் ரூபாய்க்கான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து திருடப்பட்ட வாகனம் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நிஜாமுதீன் மற்றும் ரஜீம் ஆகிய இருவரம் கோயமுத்தூரில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் ஒருவரிடமிருந்து ஒருலட்சம் ரூபாய் கொடுத்து கள்ளநோட்டுகளை வாங்கி வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவை போலீசாருடன் தொடர்புகொண்டு விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.