பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மின்தடை காரணமாக சர்வர்கள் இயங்காததால் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் அவதியடைந்தனர்.
நினோய் அகினோ சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக விமானப் போக்குவரத்து முடங்கியது.
361 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய 65 ஆயிரம் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
மின்தடை காரணமாக மணிலா வழியாக செல்லக்கூடிய விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், வெவ்வேறு நாடுகளுக்கு அந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.