ஆஸ்திரேலியா வரும் சீன பயணிகள், வரும் 5ம் தேதி முதல் கோவிட் பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று, ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்புகள் குறித்த விபரங்களை, சீனா முழுமையாக வெளியிடாததை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் மார்க் பட்லர் கூறினார்.