ஹாங்காங்கில் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் நாளை முதல் நீக்கப்படுவதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் ஜான் லீ அறிவித்துள்ளார்.
ஹாங்காங் வரும் மக்கள் இனி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமில்லை என்றும் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி பாஸ் காண்பிக்க வேண்டியது அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பொது இடங்களில் மக்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டாலும், மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென்ற கட்டுபாடு தொடர்ந்து அமலில் உள்ளதாக ஜான் லீ குறிப்பிட்டுள்ளார்.