குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் நிகழ்ந்த தனித்தனி பாரா கிளைடிங் விபத்தில் தென்கொரியாவைச் சேர்ந்தவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
குஜராத்தின் மெக்ஷனா மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு வந்த தென்கொரியாவைச் சேர்ந்த 50 வயதான ஷைன் பையீங்க் மூன், பாரா கிளைடிங்கில் பறந்து தரையிறங்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்து இறந்தார்.
அதே போன்று மகராஷ்டிராவின் சட்டாரா பகுதியைச் சேர்ந்த 30 வயதான சூரஜ் சஞ்சய் ஷா, இமாச்சலப்பிரதேத்தின் குலு மாவட்டம் தோபியில் பாரா கிளைடிங்கில் பறந்தபோது இருக்கை உடைந்ததால் 100 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் இறந்தார்.