ஜெர்மனி தலைநகர் பெர்லினில் 2019ம் ஆண்டு கிரீன் வால்ட் அருங்காட்சியத்தில் கலைப் பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், லேண்ட்வேர் கால்வாயில் இறங்கி ஜெர்மன் போலீஸார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
டிரெஸ்டன் நகரில் ஐரோப்பாவின் மிகப்பெரிய கலைப்பொக்கிஷங்களின் சேகரிப்பு அரண்மனையில் 'கிரீன் வால்ட்' அருங்காட்சியம் உடைக்கப்பட்டு, 120 மில்லியன் டாலர் மதிப்பிலான கலைப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
பழைமை வாயந்த அருங்காட்சியங்களில் ஒன்றான இதில், 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய நகைகள், கலைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த ஜனவரியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
திருடப்பட்ட நகைகளில் பெரும்பாலாவை மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான நகைகளை தேடும் பணியில் ஈடுபடுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.