கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விவரத்தை வெளியிடுவதை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் நிறுத்தியுள்ளது.
சீன அரசு வெளியிடும், தொற்று விவரங்களின் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குள்ளான நிலையில், காரணம் குறிப்பிடாமல், தினசரி தொற்று பாதிப்பு விவரங்கள் வெளியிடுவதை சீனா நிறுத்தியுள்ளது.
ஆராய்ச்சி மற்றும் குறிப்புக்காக தொற்று பாதிப்பு விவரங்களை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தினசரி மில்லியன் கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாவார்கள் என்றும், சுமார் ஐந்தாயிரம் பேர் வரை உயிரிழக்கக்கூடும் என கணிக்கப்பட்ட நிலையில், கடந்த 4 நாட்களாக தொற்று பாதிப்பால், உயிரிழப்பு ஏற்படவில்லை என சீனா தெரிவித்துள்ளது.