இந்தியா - சீனா இடையேயான உறவுகளின், நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சியை நோக்கி, இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
ராஜதந்திர மற்றும் இராணுவ வழிகள் மூலம் இரு நாடுகளின் தொடர்பைப் பேணி வருவதாகவும், இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட உறுதிபூண்டுள்ளதாகவும், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ தெரிவித்தார்.
எல்லைப் பிரச்சனை தொடர்பாக கடந்த 20-ம் தேதி, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளிடையே, 17-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், மேற்கு பகுதியில் இரு நாடுகளும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேண ஒப்புக்கொண்டன.