ஃபிஜி நாட்டின் புதிய பிரதமராக சிதிவேனி ரபுகா பொறுப்பேற்றுள்ளார்.
இதன் மூலம் கடந்த 2006-ம் ராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஃபிராங்க் பைனிமராமாவின் 16 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 28 ரபுகாவிற்கு ஆதரவாகவும், 27 பேர் முன்னாள் பிரதமர் ஃபுராங்க் பைனிமராமவிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கட்சியின் தலைவரான ரபுகா, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.