வங்கதேச முகாம்களில் இருந்து படகில் தப்பிய ரோஹிங்யா அகதிகள் 160 பேர் ஒருமாதத்துக்கும் மேலாக கடலில் தவித்துக் கொண்டுள்ளனர்.
கள்ளத்தனமாக படகு மூலமாக மலேசியா செல்ல முயன்ற அவர்களை மீட்க வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐநா.மனித உரிமைக் ஆணையம் போன்றவை இந்தியா, மலேசியா, தாய்லாந்து அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
வங்கதேச அகதிகள் முகாம்களில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற அவர்கள் கடலில் வழிதவறி தத்தளித்து வருகின்றனர்.வாரக்கணக்கில் கடலில் இருப்பதால் உணவும் குடிநீரும் கிடைக்காமல் குழந்தைகளுடன் பலர் தவிக்கும் நிலை உள்ளது.
படகில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் இந்தப் பயணத்தின்போது உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.