ஹைதராபாத்தில், பாதாள சாக்கடை மேல் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தளம் திடீரென இடிந்து விழுந்ததில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
கோஷாமஹால் பகுதியில், பாதாள சாக்கடை மேல் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தளம் மீது ஏராளமான வாகனங்களும், தள்ளுவண்டிகளும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென 100 மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் தளம் உடைந்ததால், வாகனங்கள் பள்ளத்திற்குள் விழுந்தன.
இந்த சம்பவத்தில் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.