சென்னையில் செல்போன் திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், பெண் உதவி ஆய்வாளர் உள்பட 4 போலீஸார் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
துரைப்பாக்கத்தில் கடந்த 20ம் தேதி பேருந்தில் பயணித்தவரிடம் செல்போன் திருடியதாக, பெரம்பூரைச் சேர்ந்த தினேஷ்குமாரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணை நடத்திய போலீஸார், தப்பியோடிய அவரது நண்பரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த நிலையில், கொலை - செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ள தினேஷ்குமாரை விட்டு விட்டனர்.
வீடு திரும்பிய தினேஷ்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே இறந்ததையடுத்து, போலீஸார் தாக்கியதே அவரது இறப்பிற்கு காரணமென உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், துரைப்பாக்கம் உதவி ஆய்வாளர்கள் கலைச்செல்வி, ராஜாமணி மற்றும் தலைமை காவலர் சந்திரசேகரன், காவலர் பார்த்தசாரதி ஆகிய 4பேர், கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை, சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.