உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணத்தால், எந்த ஒரு நன்மையும் உக்ரைனுக்கு கிடைக்காது எனவும், உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை எனவும், ரஷ்ய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனுக்கான மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவி, மோதலை தீவிரப்படுத்தும் எனவும், உக்ரைனுக்கே எதிர்வினையாற்றும் என்றும் எச்சரித்தார்.