சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, மக்கள் இயற்கை மருந்துகளை நாடுவதால் எலுமிச்சை பழத்திற்கான தேவை அதிகரித்துள்ளது.
ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி சீனாவில் எலுமிச்சை வணிகம் திடீரென அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எலுமிச்சை பழத்திற்கான விலையும் இரண்டு மடங்காகியுள்ளது.
வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், எடை குறைப்பு முதல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவரை பல நன்மைகள் இருப்பதால் மக்கள் அதிகளவில் எலுமிச்சை பழத்தை வாங்கி வருகின்றனர். ஆரஞ்சு மற்றும் பேரிக்காய் உள்ளிட்ட மற்ற பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.