தென் அமெரிக்க நாடான பெருவில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
பெரு அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ, கடந்த 7ம் தேதி, பதவி நீக்கம் செய்யப்பட்டு, கிளர்ச்சி மற்றும் சதி குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பெருவில் மத்திய பகுதியிலுள்ள பிச்சானாகி பாலத்தில் போராட்டக்காரர்கள் வைத்த தடுப்புகளை, போலீஸார் அகற்றியதோடு கண்ணீர்புகை குண்டுகளையும் வீசினர்.
அப்போது, இருதரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 9 போலீஸார் உட்பட 52 பேர் காயமடைந்ததாக, பெரு அரசு தெரிவித்துள்ளது.