அரசு நிதியை, அரசியல் விளம்பரங்களுக்காக தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து 97 கோடி ரூபாயை வசூலிக்குமாறு தலைமை செயலாளருக்கு, டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
அரசு விளம்பர ஒழுங்குமுறை தொடர்பான உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை, ஆம் ஆத்மி கட்சி மீறியதாக துணை நிலை ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேநேரம், இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க, துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என தெரிவித்துள்ள ஆம் ஆத்மி தரப்பு, இது துணை நிலை ஆளுநரின் புதிய காதல் கடிதம் என விமர்சித்துள்ளது.