ஜப்பானின் வடக்கு மாகாணமான நீகாட்டாவில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பனிப்பொழிவின் காரணமாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில், மக்கள் மாற்று போக்குவரத்துக்காக பேருந்துகளை நாடியதால், நீகாட்டா பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சாலைகள் மற்றும் நடைபாதைகள் பனிபடர்ந்து வழுக்கும் நிலையில் இருந்ததால், பயணிகள் சவாலான சூழலை எதிர்கொண்டனர். கடந்த சில நாட்களாக ஜப்பானின் சில பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.