நாட்டின் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 5 ஜி சேவை வழங்குவதற்காக, இதுவரை இருபதாயிரத்து 980 செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக, மத்திய தகவல் தொடர்பு இணை-அமைச்சர் தேவுசிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில், நவம்பர் 26-ஆம் தேதி வரை, 20 ஆயிரத்து 980, 5 ஜி செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்திற்கு சராசரியாக இரண்டாயிரத்து 500 கோபுரங்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக டெல்லியில் ஐந்தாயிரத்து 829 கோபுரங்களும், மகாராஷ்டிராவில் நான்காயிரத்து 51 கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.