கேரள அரசு எண்டே பூமி என்ற பெயரில் தமிழக எல்லைப்பகுதியில் நில அளவீடு செய்து வருவதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நில அளவீடு குறித்து தமிழக விவசாயிகள் தகவல் தெரிவித்தும் அதனை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து வந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் ஆனைக்கல், தேனி மாவட்டம் பாப்பம்பாறை பகுதியில் 80 ஏக்கரை கேரளா கையகப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்திருப்பதால் கண்ணகி கோயில் நிர்வாகத்தில் கேரளாவின் தலையீடு, கனிமவளம் கொள்ளை உள்ளிட்ட பிரச்சனைகளில் திமுக மவுனம் காத்து வருவதாக கூறியுள்ள அண்ணாமலை நிலப்பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.