சென்னை ராயபுரத்தில் உடல் வலி நிவராண மாத்திரைகளை விற்றதாக, தந்தை மகன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராயபுரத்தில் உடல்வலி நிவாரண மாத்திரைகளை சிலர் விற்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மெட்ரோ வாட்டர் பில்லிங் ஸ்டேசன் அருகே காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு நின்ற 3 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். இதில் அவர்களிடம் இருந்து 60 உடல்வலி நிவாரண மாத்திரைகள் இருப்பதை கண்டுபிடித்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் அர்ஜுன்,அவரது தந்தை ஜெய்சங்கர், மற்றும் ஷாகில் ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.