கத்தாரில் நடைபெற்ற குரோஷியா-மொராக்கோ அணிகளுக்கிடையேயான கால்பந்து போட்டியின்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த நகைச்சுவை நடிகர் ஹோவர்ட் எக்ஸ், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் தோற்றத்துடன் காணப்பட்டார்.
போட்டி நடந்த கலீஃபா சர்வதேச மைதானத்திற்கு வெளியே கிம் ஜாங் உன்னை போலவே உடை அணிந்து, செய்கைகளை செய்த அவரைப் பார்த்து ரசித்த கால்பந்து ரசிகர்கள் சிலர், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண ஆளுநர் தேர்தலில் டேனியல் ஆண்ட்ரூஸை எதிர்த்து ஹோவர்ட் எக்ஸ் போட்டியிட்டார்.