ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைன் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 6 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணிகள் இடைவிடாது தொடருவதாகவும், வெப்பம் மற்றும் நீர் விநியோகத்தில் தொடர்ந்து சிக்கல் நீட்டிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும், கீவ், வின்னிட்சியா, லிவிவ் உள்ளிட்ட நகரங்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் ஜெலென்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.