சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதையடுத்து, தகனக் கூடம் முன்பு சடலங்களுடன் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
உயிரிழப்புகள் அதிகரிப்பதால் சவப்பெட்டிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஓட்டுனர்கள், இறுதிச் சடங்குகள் செய்யும் ஊழியர்கள் பணியை செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.
கடந்த 7-ம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளை தளத்துவதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.