மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், எந்தப் பொருளுக்கும் வரி உயர்த்தப்படவில்லை.
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் பேசிய நிர்மலா சீதாராமன், புகையிலை, குட்கா மீது வரி விதிப்பது குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும், பருப்பு வகைகளின் உமிகள் மீதான வரியை 5%-இல் இருந்து பூஜ்யம் சதவீதமாக குறைக்க முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.