துனிசியாவில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார நெருக்கடியால் நாடு போராடிவருவதால், இன்றைய வாக்குப்பதிவில் மக்கள் போதிய அளவில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
முக்கியக் கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் 161 இடங்களுக்கு மொத்தம் 1058 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் நின்றனர்.
அதிபர் கைஸ் சையத் தன் அதிகாரத்தை பலப்படுத்தும் நோக்கில் செயல்படுவதை கண்டித்து துனிசியாவில் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வந்தது.