பத்திரிகையாளர்களின் முடக்கப்பட்ட டிவிட்டர் கணக்குகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.
டிவிட்டரை எலான்மஸ்க் கைப்பற்றியதிலிருந்து ஏற்பட்டு வரும் சர்ச்சைகள் தொடர்பாக தொடர்ந்து பதிவு செய்து வந்த பத்திரிகையாளர்களின் டிவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியதற்கு ஜெர்மன், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்தன.
மஸ்க்கின் தனிப்பட்ட விபரங்களை பதிவு செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்த டிவிட்டர், நேரடி இருப்பிடத் தகவலை பகிர்வதை தடை செய்யும் வகையில் தனது தனியுரிமை கொள்கையை மாற்றி அமைத்துள்ளது.