பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ உயிரியல் பூங்காவில் இருக்கும் சிங்கத்திற்கு, 14வது பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சிம்பா என்றழைக்கப்படும் இந்த சிங்கம், கடந்த 2016ம் ஆண்டு Santa Catarina பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து இங்கு அழைத்து வரப்பட்டது.
சிம்பா சிங்கத்தின் 14வது பிறந்தநாளை ஒட்டி பூங்கா ஊழியர்கள், இறைச்சி, ரத்தம் உள்ளிட்டவற்றால் ஆன கேக்கை தயாரித்து சிங்கத்திற்கு வழங்கினர்.
சிங்கம் அந்த கேக்கை உண்டு மகிழ்ந்ததை, பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.