அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரச்சாரக் குழுக்கள், நிதி மோசடியில் சிறையில் அடைக்கப்பட்ட கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் FTX-ன் நிறுவனர் சாம் பேங்க்மேன்-ஃபிரைடிடமிருந்து பெற்ற நன்கொடைகளைத் திருப்பித் தர இருப்பதாக அறிவித்துள்ளன.
பஹாமாஸில் கைது செய்யப்பட்ட சாம் பேங்க்மேனின் மோசடி அமெரிக்காவில் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே அவரிடம் இருந்து பெற்ற 1.1 மில்லியன் டாலருக்கும் அதிகமான நன்கொடையைத் திரும்பித் தரத் தயாராகி வருவதாக ஜனநாயக தேசியக் குழு, ஜனநாயகக் கட்சியின் செனட்டோரியல் பிரச்சாரக் குழு மற்றும் ஜனநாயகக் காங்கிரஸின் பிரச்சாரக் குழுக்கள் அறிவித்துள்ளன.