அமெரிக்காவில், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான போர் விமானத்தின் பைலட், பாராசூட் உதவியுடன் வெளியேறினார்.
டெக்சாஸில், அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமான தளத்தில், போர் விமானி ஒருவர் தனது F35 ரக ஜெட் விமானத்தை, வழக்கமாக ஓடுபாதையில் தரையிறக்குவது போல் அல்லாமல், செங்குத்தாக ஹெலிகாப்டர் போல் தரையிறக்க முயன்றார்.
அப்போது, விமானத்தின் முகப்பு பகுதி ஓடுபாதையில் செங்குத்தாக மோதி, விமானம் சுழலத்தொடங்கியது.
சுதாரித்துக்கொண்ட விமானி, Ejection seat வசதியை பயன்படுத்தி, நொடிப்பொழுதில் பாராசூட் மூலம் வெளியேறினார்.