துருக்கியில், போலீஸ் வாகனத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில், காவல்துறை அதிகாரிகள் 8 பேர் காயமடைந்தனர்.
அதிகாலை, டியார்பகிர் நகரம் அருகேயுள்ள புறவழிச்சாலை வழியாக, போலீஸ் கவச வாகனம் சென்றபோது, சாலையோரத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியது.
இந்த தாக்குதலில் வாகனத்திலிருந்த 8 போலீசார், காயமடைந்தனர். சந்தேகத்தின்பேரில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்டை நாடான சிரியாவில் வசிக்கும் குர்து போராளிகள் மீது துருக்கி வான் தாக்குதல் நிகழ்த்தி வருவதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.