இசை மன்றங்களில் தமிழ் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் இசை தவறாது ஒலிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியின் 96வது ஆண்டு விழா கருத்தரங்கில் முதலமைச்சர் பங்கேற்றார்.
அதில் உரையாற்றிய அவர், தமிழர்களின் இசை பழமையானது மற்றும் செழுமையானது என்றும் இசை வடிவம் எவ்வாறாக இருந்தாலும், அது தமிழ் இசையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.