ஆந்திர மாநிலம் கடப்பாவிலுள்ள அமீன் தர்க்காவில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வழிபாடு நடத்தினர்.
தனது மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பதி சென்ற ரஜினிகாந்த், பின்னர் அங்கிருந்து கடப்பாவிலுள்ள அமீன் தர்க்காவுக்கு சென்றார். அங்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும், ரஜினிகாந்திற்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், இருவரும் பிரார்த்தனை செய்தனர்.