பெருவில், முன்னாள் அதிபர் காஸ்டிலோவை விடுவிக்கக்கோரி நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 30 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கிளர்ச்சி மற்றும் சதி செய்ததாக, பெட்ரோ காஸ்டிலோவிற்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கக்கோரிய வழக்கில், விசாரணையை, பெரு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதனைதொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில், இதுவரை 8 பேர் உயிரிழந்த நிலையில், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், வன்முறையை கட்டுப்படுத்த போலீசாருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.