பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு சீனா உதவியாக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். ஜி 20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வருவதால், ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக ஜி20 தலைமை முன் உள்ள சவால்கள் குறித்து ஐநா.பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டாரசுடன் ஆலோசனை நடத்தினார். ஐநா.தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை குட்டரசும், ஜெய்சங்கரும் திறந்து வைத்தனர்.