இந்திய - சீன எல்லையில் பதற்றத்தை தணிக்கும்படி, இரு நாடுகளுக்கும் ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.
அருணாச்சல் பிரதேசத்தின் தவாங் பகுதியில், அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்நிலையில் இந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் , இந்திய - சீன எல்லையில் பதற்றம் அதிகரிக்காதவாறு, இருநாடுகளும் செயல்படுமாறு, கேட்டுக்கொண்டார்.