புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்காக, தமிழகத்தில் இருந்து 300 ஏக்கர் நிலம் கோரப்பட்டுள்ளதாகவும், விரிவாக்கத்தால் புதுச்சேரி மட்டுமின்றி, தமிழக மக்களும் பயனடைவார்கள் என்றும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சுதேஷ் தர்ஷன் நிதியின் கீழ் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தலங்களின் திறப்பு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்றபின் பேட்டியளித்த அவர், புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரின் அடக்குமுறை என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்றும், அரசுக்கு துணையாக மட்டுமே உள்ளதாகவும் கூறினார்.