நடிகர் ரஜினிகாந்தின் 73வது பிறந்த நாளையொட்டி, அவரது வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
ஆண்டுதோறும் ரஜினியின் பிறந்த நாளை கொண்டாடவும், அவரை காணவும் ரசிகர்கள், அவரது இல்லத்தின் முன்பு திரள்வது வழக்கமாகும். இந்தாண்டும் மழையை பொருட்படுத்தாமல் ரசிகர்கள், போயஸ் கார்டனில் குவிந்தனர்.
அப்போது வீட்டிற்கு வெளியே வந்த ரஜினிகாந்தின் மனைவி லதா, ரஜினி வீட்டில் இல்லை என்றும், மழையில் யாரும் நிற்க வேண்டாம் என்றும் கூறினார்.
இதனால் அங்கிருந்தவர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், ரசிகை ஒருவர் கதறி அழுதார். புதுச்சேரியில் இருந்து உடல்நிலை பாதிப்பைக்கூட பொருட்படுத்தாமல், ரஜினியை காண வந்ததாக, கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.