இந்தியாவில் ட்விட்டர் சேவை பலமணி நேரம் முடங்கியதால் பயனாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
இதனால் ட்விட்டர் தளத்தில் அவர்களால் கருத்துகளை பதிவேற்ற முடியவில்லை. இதுகுறித்து இந்தியாவில் ஆயிரக்கணக்கான ட்விட்டர் பயனாளிகள் புகார்களை குவித்தனர்.
இன்று முதல் டிவிட்டரின் புளு சர்வீஸ் எனப்படும் நீல நிற அடையாளம் அமலுக்கு வருகிறது. பிரபலங்கள் தங்கள் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட 8 டாலர் சந்தா செலுத்தி நீல நிற அடையாளத்தைப் பெறலாம் என்று ட்விட்டரை கைப்பற்றியுள்ள எலன் மஸ்க் அறிவித்திருந்தார்.
இன்று அது அமலுக்கு வரும் நிலையில் நேற்று ட்விட்டர் சேவை முடங்கியது. பலமணி நேரம் கழித்தே அது சரிசெய்யப்பட்டது.