மாண்டஸ் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தபோது, சென்னை மேயர் பிரியா தொங்கியபடி பயணித்த முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தின் காப்பீடு காலாவதியாகி விட்டதாக, சமூகவலைத்தளங்களில் கேள்விகள் எழுந்த நிலையில், அரசு வாகனங்களுக்கு காப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனச்சட்டப்பிரிவு 146-ன் கீழ், எந்த ஒரு வணிக நிறுவனத்துடனும் தொடர்பில்லாத, உத்தியோக நோக்கங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் மத்திய அல்லது மாநில அரசு வாகனங்களுக்கு காப்பீடு தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.