அதிசக்தி வாய்ந்த ஆயுதங்களின் உற்பத்தியை ரஷ்யா அதிகரித்துள்ளதாக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் திமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள எதிரிகளிடமிருந்து, தங்களை பாதுகாக்க, புதிய தலைமுறை ஆயுதங்களின் உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிபர் புதின், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் உள்பட புதிய வகை ஆயுதங்களை ரஷ்யா மேம்படுத்தி வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.