திருவள்ளூர் அருகே இ- சேவை மையத்தின் பூட்டை உடைத்து 15 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்குன்றம் அடுத்த மொன்டியம்மன் நகரில் செந்தில்குமார் என்பவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார்.இங்கு அரசுசான்றிதழ்கள் தரும் சேவை மட்டுமின்றி ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனையும நடத்தியுள்ளார்.
காலை கடையை திறக்க சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த 15 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கபட்டுள்ளது தெரியவந்தது.